1992-93ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பிகார் மாநில முதலமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். அப்போது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ரூ.950 கோடி ஊழல் செய்ததாகவும், சாய்சபா கருவூலப் பணத்தில் ரூ.33.67 கோடி மோசடி செய்ததாகவும் ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
அதில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 2017ஆம் ஆண்டு முதல் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் மோசமானதால், ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையடுத்து லாலுவின் உடல்நிலையை காரணம்காட்டி, பிணை வழங்கவேண்டும் என அவரது குடும்பத்தினர் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனு ஆகஸ்ட் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, ஆர்ஜேடியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: உன்னை விட மாட்டேன்' - 40 ஆண்டு சகாவின் ராஜினாமவை ஏற்க மறுத்த லாலு