ETV Bharat / bharat

20 லட்சம் கோடி - என்னென்ன திட்டங்கள்? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! - Nirmala Sitharaman on Stimulus Package

நிர்மலா சீதாராமன் பொருளாதார அறிவிப்பு  ரூ.20 லட்சம் கோடி நிதிதொகுப்பு  நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு  நிர்மலா சீதாராமன் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்  Nirmala Sitharaman on Stimulus Package  Nirmala Sitharaman Press confernce

author img

By

Published : May 13, 2020, 3:59 PM IST

Updated : May 13, 2020, 5:47 PM IST

17:23 May 13

செய்தியாளர்கள் சந்திப்பு

நிர்மலா சீதாராமன் பொருளாதார அறிவிப்புக்கு இடையே செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

17:15 May 13

வருமான தாக்கல் நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்ய மேலும் மூன்று மாதங்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வருமான வரி தாக்கல் செய்யாதவர்களின் காலஅவகாசம் ஜூலையிலிருந்து நவம்பர் மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் வருமான வரி தாக்கல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு டிசம்பர் 31ஆம் தேதியாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூலை மாதம் வரை மட்டுமே காலக்கெடு கொடுக்கப்படும்.

17:04 May 13

ஒப்பந்தப்புள்ளி நீட்டிப்பு

ரயில்வே, சாலை உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் வங்கி உத்தரவாதம் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு.

  • ஏற்கனவே பதிவு செய்துள்ள கட்டுமான திட்டங்களின் பதிவுக்காலம் ஆறு மாதம் நீட்டிப்பு.
  • ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சில தளர்வுடன் அனுமதி. மாநில அரசுகளும் ரியல் எஸ்டேட் துறைக்கு உதவ வேண்டும்.
  • அரசு ஒப்பந்ததாரர்களுக்கு மேலும் காலஅவகாசம் ஆறு மாதம் நீட்டிப்பு.
  • மார்ச் 25ஆம் தேதிக்கு பிறகு கட்டடப் பணிகளை தொடங்கிய நிறுவனங்களுக்கு கூடுதல் அவகாசம்.
  • டிடிஎஸ் வரிப்பிடித்தம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை 25 சதவீதம் குறைப்பு.
  • வரிச்சலுகை நாளை (மே14) முதல் அமலுக்கு வரும்.
  • இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு ரூ.50 ஆயிரம் கோடி பலன் கிடைக்கும்.

16:56 May 13

வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு நிதியுதவி

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி சிறப்பு மூலதன கடன் வழங்கப்படும். பங்கு வர்த்தகத்தின் மூலமாக கடன் வழங்கப்படும். இந்தப் பத்திரங்களுக்கு இந்திய அரசு உறுதியளிக்கும்.

  • தேசிய நிதி மேம்பாடு கழகத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்.
  • மின் உற்பத்தி செய்யும் டான்ஜெட்கோ டிஸ்காம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி நிதியுதவி.

16:52 May 13

மின்னணு சந்தை

அடுத்த 45 நாள்களுக்கு சிறு குறு நிறுவன பொருள்களை மின்னணு சந்தை வாயிலாக சந்தைப்படுத்தப்படும்.

16:49 May 13

வருங்கால வைப்பு தொகை பங்களிப்பு குறைப்பு

வருங்கால வைப்புத் தொகை நிதியில் தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு தொகையை அரசே மூன்று மாதங்களுக்கு செலுத்தும். இதனால் 72 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக அரசு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் நிறுவனங்களின் பங்களிப்பும் 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படும். 

16:30 May 13

முதலீடு உச்ச வரம்பு மாற்றம்- டெண்டர் (ஒப்பந்தம்) கட்டுப்பாடு

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக முதலீட்டு உச்ச வரம்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ரூ.1கோடிக்கும் குறைவாக உள்ள நிறுவனங்கள் சிறு குறு நிறுவனமாக அறிவிக்கப்படும். முன்னர் இந்த வரம்பு ரூ.25 லட்சமாக இருந்தது. தற்போது அது ரூ.1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரூ.20கோடிக்கும் குறைவாக இருந்தால் அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனமாக அறிவிக்கப்படும். அதாவது, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இனி ரூ.200 கோடி வரையிலான டெண்டர்கள் உலக விதிமுறைகளுடன் சர்வதேச அளவில் வெளியிடப்படாது. ரூ.200 கோடிக்கும் குறைவான டெண்டர்கள் (ஒப்பந்தங்கள்) சிறு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

16:28 May 13

ரூ.3 லட்சம் கோடி கடன்

குறு சிறு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். இந்தத் திட்டம் அக்டோபர் 31ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும். அடமானமின்றி கடன் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.100க்கும் குறைவான நிறுவனங்களுக்கும் பலன் கிடைக்கும்.

கடன் சுமையில் சிக்கி நிதிநெருக்கடியில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்கப்படும். வாராக்கடனில் உள்ள நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப்படும். முதலீடு உச்ச வரம்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு குறு நிறுவனங்கள் பயன்பெறும்.

சிறு குறு நிறுவனங்களுக்கு சேர வேண்டிய அனைத்து தொகையும் 45 நாள்களில் வழங்கப்படும். தவணைக் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும்.

16:26 May 13

18 ஆயிரம் கோடி விடுவிப்பு

வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி தொகை உடனடியாக விடுவிக்கப்படும்.

16:24 May 13

71 ஆயிரம் டன் உணவுப் பெருள்கள்

6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71 ஆயிரம் டன் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது.  

16:20 May 13

ரூ.52 ஆயிரம் கோடி நிவாரணம்

நாட்டில் தொழில் தொடங்க விதிகள் எளிதாக்கப்படும். இதுவரை 41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52 ஆயிரம் கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

16:18 May 13

தற்சார்பு பொருளாதாரம்

இந்தியா பொருளாதாரம், உள்கட்டமைப்பு, நமது அமைப்பு, துடிப்பான ஜனநாயகம் மற்றும் தேவை ஆகிய ஐந்து தூண்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து தூண்களுக்கு வலுவூட்ட வேண்டும். இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதே பிரதமரின் நோக்கம். தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ பொருள்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுவருகின்றன.

பல்வேறு நிதி வல்லுநர்களுடன் ஆலோசித்து நிதித் திட்டம் வகுக்கப்பட்டடுள்ளது. நாட்டை தற்சார்பு பொருளாதாரமாக மாற்ற இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

15:59 May 13

நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டத்தை அறிவிக்கும் போது ஆற்றிய உரையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ஐந்து நோக்கங்களுடன் பொருளதார சிறப்பு திட்டங்களில் கவனம் செலுத்தப்படுகின்றன என்றார். அப்போது ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளால் பயனாளிகளுக்கு உதவிகள் நேரடியாக கிடைத்தது என்றும் கூறினார்.

மேலும் பிரதமரின் பொருளாதார சிறப்பு தொகுப்பு திட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி அளிக்கும். நெடுஞ்சாலைத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து, மின்சாரத் துறைகளில் பல்வேற சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா மின்மிகை நாடாக உள்ளது” என்றார். இதற்கிடையில் தற்சார்பு பொருளாதாரமாக நாட்டை மாற்றுவதே பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதிப்பு குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் கூறினார்.

15:28 May 13

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிதித்தொகுப்பு திட்டம் குறித்து விவரிக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்கும் வகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை(மே.12) இரவு 8 மணிக்கு அறிவித்தார். அந்தத் திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரிக்கிறார்.

Last Updated : May 13, 2020, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.