டெல்லியில் இருந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு ஏர் ஏசியா விமானம் ஜூன் 9ஆம் தேதி சென்றது. அப்போது என்ஜினில் பழுது ஏற்பட்ட நிலையில் அதை தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தெரிவிக்க விமானி முற்பட்டார். அப்போது அவர் 7700 என்ற சமிஞ்சை கோடை அழுத்தாமல் தவறுதலாக விமானம் கடத்தப்பட்டால் அதை தெரிவிக்கும் 7500 சமிஞ்சை அழுத்தி விட்டார்.
காஷ்மீருக்கு சென்ற விமானம் கடத்தப்பட்டது என்ற தகவலால் விமான நிலைய அலுவலர்கள் அதிர்ந்து போயினர். இதன்பின் நடந்த சோதனையில் விமானம் கடத்தப்படவில்லை என தெரிந்து நிம்மதியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி, விமானத்தை இயக்கிய விமானி ரவி ராஜூக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு தனது தவறு குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
இதில் திருப்தியடையாத மத்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம், அந்த விமானியை மூன்று மாதம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.