மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர், தன்னார்வ அமைப்பினர், மாணவ - மாணவிகள் உள்ளிட்டோர் நாடு முழுவதும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, பிகார் மாநிலம் கோசி பாலம் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான இஸ்லாமியர்கள், 100 மீட்டர் நீளமுள்ள தேசியக்கொடியுடன் பேரணி நடத்தினர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக போராட்டக்காரர்கள் கூறுகையில், "நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாகப் பாதுகாப்பு வழங்க வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காக நாங்கள் ரத்தம் சிந்தியுள்ளோம். தேவைப்பட்டால், இந்தச் சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராடுவோம்" என்றனர்.
இதையும் படிங்க: தேசதுரோக வழக்கு: ஜேஎன்யூ மாணவர் ஷர்ஜூல் இம்ரானிடம் ஐந்து நாள்கள் விசாரணை