ETV Bharat / bharat

நொய்டாவில் தடையை மீறி பட்டாசு விற்ற 5 பேர் கைது - டெல்லி மாநில செய்திகள்

டெல்லி: தடையை மீறி பட்டாசு விற்பனை செய்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Five arrested for selling firecrackers
Five arrested for selling firecrackers
author img

By

Published : Nov 15, 2020, 9:23 AM IST

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், அங்கு நவம்பர் 30 வரை பட்டாசு வெடிப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. அம்மாநில அரசு சார்பிலும் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

என்.சி.ஆர் பகுதியில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து வருவதால் அங்கு பட்டாசு விற்பனையையும், வெடிப்பதையும் தடுக்க காவல் துறையினர் முடுக்கிவிடப்பட்டனர்.

இந்நிலையில், நொய்டா பூங்கா பகுதியில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை 39 அட்டைப் பெட்டிகளில் விற்பனைக்கு வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்ததுடன் பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைதான இருவரும் புலந்த்ஷர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் சைனி, காசிஃப் ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதைப் போல சூரஜ்பூர் காவல் நிலைய பகுதியில் பட்டாசு விற்பனை செய்த சதேந்திர சந்த் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டாம் கட்ட காவல் நிலைய பகுதியில் சாஜித் சைஃபி என்பவர் கைது செய்யப்பட்டு, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நொய்டா செக்டார் 22-இல் அகிலேஷ் பால் என்பவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக வெடிபொருள் சட்ட விதியின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தடையை மீறி பட்டாசு வெடிப்பு: காவல்துறையினர் வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.