இமாச்சல பிரதேசம், சம்பா மாவட்டம் செலியில் உள்ள கூர்க் பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்தது. பேருந்து கவிழ்ந்த தகவலையறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று காயம் பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பேருந்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயங்களுடன் சம்பா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோனிகா தெரிவித்தார்.