கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், மீன் விற்பனையில் ஈடுபடக்கூடாது என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.
இதனால் புதுச்சேரி நல்லவாடு கிராமப் பகுதியில் உள்ள மீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
குறிப்பாக தற்போதைய தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை உள்ளதால் அத்தியாவசியப் பொருட்களை வீடுதோறும் அரசு வழங்க வேண்டும் என்றும், வருகின்ற மீன்பிடி தடை காலத்திற்கு முன்னதாகவே மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், மேலும் தங்களுக்கு நிவாரணமாக ஒரு மீனவர் குடும்பத்திற்கு ரூபாய் 10,000 வீதம் வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு வழங்குக'