ETV Bharat / bharat

வரலாற்றிலேயே மிக மோசமான, ஆணவம் கொண்ட மத்திய அரசு: சோனியா காந்தி தாக்கு

வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களை கண்டுகொள்ளாமல் மத்திய அரசு ஆணவப் போக்கில் செயல்படுகிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Sonia Gandhi
Sonia Gandhi
author img

By

Published : Jan 3, 2021, 4:56 PM IST

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றன. இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கை வைத்தது.

விவசாயிகளின் போராட்டம் 39 நாட்களாக தொடர்ந்துவரும் நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், “மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளாமல் எந்தவொரு அரசும் ஜனநாயகத்தில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க முடியாது.

தனது ஆணவத்தை விட்டு, சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. விவசாயிகள் குளிர், மழை பாராமல் போராட்டம் நடத்திவரும் நிலையில், அவர்களின் தியாகத்திற்கு மத்திய அரசு செய்யும் பிரயாசித்தம் இதுவாகத்தான் இருக்கும்.

மத்திய அரசின் பாராமுகத்தால் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுவரை உயிரிழந்துள்ளனர். சுதந்திர இந்திய வரலாற்றிலேயே இதுபோன்ற ஆணவமிக்க அரசை பார்த்ததில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி... உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.