ETV Bharat / bharat

வந்தே பாரத்: அமெரிக்காவிலிருந்து தாயகம் அழைத்துவரப்பட்ட இந்தியர்கள்

author img

By

Published : May 11, 2020, 3:25 PM IST

மும்பை : கோவிட்-19 உலகளாவிய முடக்கத்தால் அமெரிக்காவில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 225 பேர் சிறப்பு விமானத்தில் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

First batch of 225 Indians stranded in US arrives in Mumbai
வந்தே பாரத்: அமெரிக்காவிலிருந்து தாயகம் அழைத்துவரப்பட்ட இந்தியர்கள்

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் நெருக்கடியால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்துவரும் லட்சக்கணக்கான இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர மே 7ஆம் தேதிமுதல் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற பெயரில் இந்திய அரசின் விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றன. மத்திய வெளியுறவுத் துறையின் கண்காணிப்பின்கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் சிக்கியிருந்த 225 இந்தியர்கள் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு இன்று அதிகாலை வந்தடைந்தனர்.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக 225 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கு ஆதரவும் ஒருங்கிணைப்பும் செய்த மகாராஷ்டிரா அரசுக்கும், ஏர் இந்தியாவுக்கும் நன்றி. அமெரிக்க தூதரக உயர் அலுவலர் சி.ஜி. சஞ்சய் பாண்டா மற்றும் அவரது குழுவினரின் சிறந்த பணிக்கு பாராட்டுகள்” என்றார்

மும்பை விமான நிலைய அலுவலர்கள் கூறுகையில், “மீட்புப் பணிகளுக்காக பிரத்யேகமாக இயக்கப்பட்ட ஏர் இந்தியா விரைவு விமானம் மூலமாக முதல்கட்டமாக 225 பேர் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்த விமானம் இன்று அதிகாலை மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. மருத்துவ, நிர்வாக அலுவலர்களுக்கு உதவி ஊழியர்களுடன் நிவாரணப் பொருள்கள், கோவிட் -19 பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுஇருந்தன. தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, சுகாதாரப் பராமரிப்புடன் அவர்கள் அனைவரும் அழைத்துவரப்பட்டுள்ளனர். சிறப்பு விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், நீரிழிவு நோய் அல்லது ஏதேனும் சுவாச நோய் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டன. அறிகுறியற்ற பயணிகளும், பாதிக்கப்பட்ட பயணிகளும், தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் சிறப்பு சீருந்துகள் (டாக்சி), சொகுசுப் பேருந்துகள்மூலம் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மாற்றப்படுவர்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : வந்தே பாரத்: தாயகம் அழைத்துவரப்பட்ட கேரள மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.