உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் பெங்காலி காட் பகுதியைச் சேர்ந்த பூபேந்திர சதுர்வேதி, மஹாநகர் பகுதியைச் சேர்ந்த செளதாரி சங்கெத் அகர்வால் ஆகிய இருவரும் நேற்று தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தியைப் பற்றித் தரக்குறைவாகப் பதிவிட்டிருந்தனர்.
இந்தப் பதிவு காங்கிரஸ் கட்சியினரைக் காயப்படுத்தியுள்ளது. இதையடுத்து உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் செயலாளர் முகேஷ் தங்கர் - பூபேந்திர சதுர்வேதி மீது கோட்வாலி காவல் நிலையத்திலும், மஹாநகர் காங்கிரஸ் தலைவர் உமேஷ் ஷர்மா செளதாரி சங்கெத் அகர்வால் மீதும் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் இருவரும் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 295 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
நேற்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்திக்கு ட்விட்டர் மூலமாகக் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா சம்பந்தப்பட்ட பொருள்களின் வரியைத் தளர்த்துங்கள் - ராகுல் காந்தி கோரிக்கை