ETV Bharat / bharat

பற்றி எரியும் எரிவாயுக்கிணறு: வெளிநாட்டு வல்லுநர்களை அழைத்துவருகிறது ஆயில் இந்தியா! - பக்ஜான்

கவுஹாத்தி: ஆயில் இந்தியா லிமிடெட் எரிவாயு கிணற்றின் ஏற்பட்டுள்ள தீவிபத்திலிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளைக் காக்கும் முயற்சியில் பேரிடர் பாதுகாப்புப்படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

பற்றி எரியும் எரிவாயுக்கிணறு வெளிநாட்டு வல்லுநர்களை அழைத்துவருகிறது ஆயில் இந்தியா

author img

By

Published : Jun 12, 2020, 10:20 AM IST

அஸ்ஸாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தை அடுத்துள்ளது பக்ஜான் கிராமம். அந்தக் கிராமத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் (ஓஐஎல்) இயற்கை எரிவாயு உற்பத்தி செய்துவருகிறது.

இந்நிலையில், அந்நிறுவனத்திற்குச் சொந்தமான எரிவாயு உற்பத்திசெய்யும் கிணற்றில் கடந்த 8ஆம் தேதி திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

இந்தத் தீவிபத்து சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பிற்பகலில் பற்றி எரியத் தொடங்கிய தீயிலிருந்து எழுந்த புகை, ஏறத்தாழ 30 கி.மீ. தூரம்வரை உள்ள கிராமங்களை மாசுபடுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

அந்தப் பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். துரிதகதியில் அங்கே மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இது தொடர்பாக ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஜெயந்த் போர்முடோய் கூறுகையில், "பாக்ஜானில் உள்ள எரிவாயுக் கிணற்றின் தளத்தில் எந்தப் புற ஆபத்துமில்லை. தற்போது, எரிவாயுக் கிணற்றின் வாயில் பாயும் வாயு மட்டுமே எரிந்து கொண்டிருக்கிறது.

இருப்பினும், எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நிறுவனத்தைச் சுற்றியுள்ள 1.5 கி.மீ. சுற்றளவு பகுதிகள் முழுமையாகச் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த வெளி நபரும் அந்தச் சிவப்பு மண்டலத்திற்கு அருகில் அனுமதியில்லை. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக மட்டுமே கருதப்பட வேண்டும்.

எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலிருந்து வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு நாள்களில் அவர்கள் அனைவரும் அஸ்ஸாமை வந்தடைவார்கள். அவர்களுக்கான விசா (நுழைவு இசைவு), பிற அனைத்து ஒழுங்குமுறை ஒப்புதல்களும் நிறைவடைந்துள்ளன.

தற்போது, ​​சிங்கப்பூர் நிறுவனமான அலர்ட் பேரிடர் கன்ட்ரோலின் மூன்று வல்லுநர்கள் இந்த இடத்தில் எரிவாயு கசிவைத் தடுக்கப் பணியாற்றிவருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

விபத்து ஏற்பட்டுள்ள கிணறு ஏறத்தாழ 4,500 பி.எஸ்.ஐ. (சதுர அங்குல பவுண்டுகள்) ஆழமும் வரை நீளுவதால் எரிவாயு கட்டுப்பாடில்லாமல் பாயும். இதன் காரணமாக எரிவாயுக் கசிவைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியம் என வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அதிகமான வெப்பத்தை வெளிக்கொணர்வதால் 50 மீட்டருக்கு அப்பால் யாருமே அந்தக் கிணற்றை அணுக முடியாத சூழலே நிலவுகிறது. இதனிடையே, ஜூன் 10ஆம் தேதி இரவு அப்பகுதியில் இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நிலத்தடி மூலங்களில் பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பு, பெரிய அளவிலான ஆக்ஸிஜனை விழுங்கியபோது, அந்த இடத்தில் வெற்றிடம் உருவாகிறது. இதன் விளைவாக திடீர் காற்று அசைவு ஏற்பட நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என வேதியல் அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த 16 நாள்களாக கட்டுப்பாடில்லாமல் எரிவாயுவை வெளியேற்றிவரும் இந்தக் கிணற்றில், கடந்த செவ்வாய் பிற்பகல் தீவிபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ஆயில் நிறுவனத்தின் தீயணைப்புத் சேவைத் துறையின் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

பாக்ஜானில் உள்ள எரிவாயு கிணறு தளத்தின் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 7,000 பேரை 12 நிவாரண முகாம்களுக்கு மாற்றியுள்ளதாக நிறுவனமும் டின்சுகியா மாவட்ட நிர்வாகமும் தெரிவித்துள்ளன.

அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு நிலைமை குறித்து விளக்கினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்குமென பிரதமர் மோடி அப்போது அவருக்கு உறுதியளித்ததாக அறிய முடிகிறது.

எரிவாயுக் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்துகளுக்காக ஓ.ஐ.எல்., ஜான் எனர்ஜி, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அஸ்ஸாம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.