ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையில் (ஸ்டீல் பிளாண்ட்) 1.2 மெகா வாட் மின் மோட்டாரில் டர்பைன் எண்ணெய் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. தற்போதுவரை தீயை அணைக்க தீயணைப்புத் துறை போராடி வருகின்றனர். இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
முன்னதாக, தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேட்சல் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு ரயில் கோச்சில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் அவ்விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செல்ல பிராணியை குழந்தையை போல் பாவிக்கும் உரிமையாளர்