தென்கிழக்கு டெல்லி துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்கிழக்கு துணை காவல் ஆணையர் ராஜேந்திர பிரசாத் மீனா, தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தினார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
"துக்ளகாபாத் பகுதியில் நள்ளிரவு ஒரு மணியளவில் தீப்பற்றியது. தகவலறிந்து அனைத்து காவல்துறை அலுவலர்களும் உடனடியாக இங்கு வந்தனர். இது அதிகம் குடிசை உள்ள பகுதி என்பதால் தீ மளமள வென பரவி 1000 குடிசைகள் எரிந்து நாசமாயின.
இந்த விபத்திற்கு பிறகு மக்கள் பலர் அப்பகுதிகளை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை இப்போது சரிபார்க்க முடியாது. தீயணைப்புத் துறையினர் மிகவும் சிரமப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அதிக பொருள் சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை எந்த உயிரழப்பும் ஏற்படவில்லை" என்றார்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விமான நிலையத்திலிருந்து தப்பிக்க முயன்ற பெண்!