இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் மணிரத்னம் உட்பட 50 பிரபலங்கள் ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினர். இக்கடிதம் அப்போது பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுகிர்குமார் ஓஜா என்பவர் பீகார் நீதிமன்றத்தில் மனு ஒன்றை பதிவு செய்தார். அதில் நாட்டின் நற்பெயரை கெடுப்பதாகவும், சிறப்பாக செயல்படும் மோடியின் பணிகளை குறைத்து மதிப்பிடுவதாகவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் பிரபலங்கள் மோடிக்கு எழுதிய கடித்தத்தில் இருப்பதாக கூறி அவர்கள் மீது வழக்குப் பதியக் கோரி அம்மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி, பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதியின் உத்தரவையடுத்து காவல்துறையினர் மணிரத்னம், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்கள் மீது பொது நலத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் நடந்துகொண்டது, அமைதியை சீர்குலைத்தது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுதிர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார். தேசத்துரோக வழக்குகளின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது என்பது குறிப்படத்தக்கது.
இதையும் படிங்க: இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி!