கடந்த வாரம் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய பெங்களூரு ஐடி ஊழியர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. அவரின் மனைவியும் கரோனா கண்டறிதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் விதிமுறைகளை மீறி யாரிடமும் தெரிவிக்காமல், பெங்களூருவிலிருந்து ஆக்ராவுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
அந்தப் பெண்ணின் தந்தை ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர் என்பதால் அவரின் தலையீடு காரணமாக எளிதாக விதிமுறை மீறி ரயில்வே துறையினர் பரிசோதனையில் தப்பித்துக்கொண்டார். பின்னர் அவரையும் அவரது தந்தையையும் ஆக்ராவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகம் தேடிக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் தந்தையின் மீது 269, 270 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ள காவல் துறை, தற்போது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மூத்தத் தலைமைக் காவலர் பப்லு குமார், இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும், கரோனா காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்நபர் மீது 14 நாள்களுக்குப் பின் காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இரண்டு லட்சத்தை நெருங்கும் கோவிட்-19 பாதிப்பு