கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுக்க மக்கள் ஊரடங்கு மேலும் 21 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஏழைகளின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தை அறிவித்தார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் பூட்டுதலின் தாக்கத்தை சமாளிக்க அரசாங்கம் அறிவித்த நிதி தொகுப்பு ஏழைகளின் உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்ய நீண்ட தூரம் பயணிக்கும்.
ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சோதனை நேரங்களை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்வதில் உறுதியாக உள்ளோம். பிரதான் மந்திரி கரீப் கல்யாண் தொகுப்பு அவர்களின் உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் நீண்ட தூரம் பயணிக்கும்” என்றார்.
-
It is our firm resolve that the poor and vulnerable get all possible help to cope with the testing times. The Pradhan Mantri Garib Kalyan Package will go a long way in ensuring food and livelihood security. #IndiaFightsCoronahttps://t.co/E4DvXCV5Vs
— Narendra Modi (@narendramodi) March 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It is our firm resolve that the poor and vulnerable get all possible help to cope with the testing times. The Pradhan Mantri Garib Kalyan Package will go a long way in ensuring food and livelihood security. #IndiaFightsCoronahttps://t.co/E4DvXCV5Vs
— Narendra Modi (@narendramodi) March 26, 2020It is our firm resolve that the poor and vulnerable get all possible help to cope with the testing times. The Pradhan Mantri Garib Kalyan Package will go a long way in ensuring food and livelihood security. #IndiaFightsCoronahttps://t.co/E4DvXCV5Vs
— Narendra Modi (@narendramodi) March 26, 2020
மத்திய அரசு ஏழைகளுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச உணவு, தானியங்கள் மற்றும் சமையல் எரிவாயு மற்றும் பெண்கள், மூத்த குடிமக்களுக்கு ரூ.1.7 லட்சம் கோடி ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு நீட்டிப்பு நேற்று (மார்ச்25) முதல் நடைமுறைக்கு வந்தது. இது அடுத்த மாதம் (ஏப்ரல் 14ஆம் தேதி) வரை அமலில் இருக்கும்.
அந்த நாட்களில் ஒன்பது கோடி ஏழைகள் பயனடையும் வகையில் ஐந்து கிலோ கோதுமை, அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்டவைகள் இலவசமாக கிடைக்கும். ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் 20 கோடி பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா ரூ.500 கிடைக்கும்.