ETV Bharat / bharat

உ.பி-யில் கணவரை ‌கொன்ற மனைவி கைது! - கணவனை‌கொன்ற மனைவி கைது

லக்னோ: கணவரை கொலை செய்த மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

woman murders husband
author img

By

Published : Jun 13, 2020, 2:32 AM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம், சுல்தான்பூர் மாவட்டம் ஜசபரா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். குடிபெயர்ந்த தொழிலாளியான இவர் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்ததையடுத்து சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார்.

இதையடுத்து, ராஜேஷ் தினமும் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது மனைவி மிகுந்த மனவேதனைக்கு ஆளாகினார். இந்நிலையில், நேற்று இரவும் ராஜேஷ் மது அருந்திவிட்டு வந்து அவரது மனைவியை துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி, ராஜேஷை கூர்மையான பொருளைக் கொண்டு தாக்கியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவர் மனைவி தனது கணவரை அவரது சகோதரர் கொலை செய்துவிட்டதாக கிராம மக்களிடம் கூறியுள்ளார்.

பின்னர் இது குறித்து கிராம மக்கள் காவல்து றையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்ககாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து, காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டபோது ராஜேஷின் மனைவி சேலையில் ரத்தக்கறை இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் ராஜேஷின் மனைவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில் அவர் தன் கணவரை கொலை செய்தை ஒத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தாயின் பிரிவு: மனமுடைந்த மகன்கள் தூக்கிட்டு தற்கொலை...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.