நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் சமீபத்திய பியூச்சர் செல்போன் ஆன நோக்கியா 5310, இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் பியூச்சர் செல்போன் ஆனது 2007ஆம் ஆண்டு அறிமுகமான நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் போனின் புதுப்பிக்கப்பட்ட மாடலாகும்.
புதிய நோக்கியா 5310 பியூச்சர் செல்போனில் டூயல் சிம் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒரு முழுமையான சார்ஜில் 22 நாள்கள் பேட்டரி ஆயுள் வழங்குகிறது. நோக்கியா 5310 செல்போன் ஒரு எம்பி 3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோவையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் நோக்கியா 5310 பியூச்சர் செல்போனின் விலை 3,399 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக், ரெட், ஒயிட், ரெட் போன்ற வண்ணங்களில் வரும் இந்த போனுக்கான ஆன்லைன் ப்ரீபுக்கிங், நேற்று முதல் நோக்கியா இணையதளத்தில் தொடங்கியது.
இதையும் படிங்க: இந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீனா!