ETV Bharat / bharat

'வேளாண் திருத்தச்சட்டங்களை ரத்துசெய்யும் வரை போராட்டம் தொடரும்' - வடமாநில விவசாயிகள் உறுதி - விவசாயிகள் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியது

டெல்லி: வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யும் வரை, தொடர்ந்து போராடுவதாக விவசாய சங்கத் தலைவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்

'வேளாண் திருத்தச்சட்டங்களை ரத்துசெய்யும் வரை  போராட்டம் தொடரும்' - வடமாநில விவசாயிகள் உறுதி

author img

By

Published : Dec 4, 2020, 10:28 AM IST

வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யும் வரை, தொடர்ந்து போராடுவதாக விவசாய சங்கத் தலைவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விவசாயிகளின் சில கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

டெல்லியில் விக்யன் பவனில் நடந்த கூட்டத்தில் 7 மணி நேர பேச்சுவார்த்தையில், விவசாய சங்கப் பிரதிநிதிகள், வேளாண்சட்டங்களில் எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், அண்மையில் கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். கூடுதலாக, அச்சட்டங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மாசுபாடு குறித்த கடுமையான தண்டனையை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் கிரந்திகரி கிஷன் என்னும் விவசாய அமைப்பின் தலைவர் இதுகுறித்து கூறுகையில், 'விக்யன் பவனில் 4ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பேசுவதற்காக அனைத்து விவசாய சங்கத் தலைவர்களும் தயார் நிலையில் இருந்தோம். அப்போது முதல் அரைமணி நேரம், மத்திய வேளாண்துறை அமைச்சர் வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். அதன்பின்பு, அந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களில் உள்ள அச்சங்களை நாங்கள் அவர்களிடம் எடுத்துரைத்தோம்.

அப்போது மத்திய அரசு வேளாண் திருத்தச் சட்டங்களில் சிலவற்றை திருத்த ஒப்புக்கொண்டனர். குறிப்பாக, மாசுபடுதல் செய்வோருக்கு அதிக தண்டனையையைக் கோரும் கொள்கையை நீக்கம் செய்யவேண்டும் என்றும், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நல்கவேண்டும் என்றும் தெரிவித்தனர். மத்திய அரசு எங்களை நேற்று (டிச.04) அழைத்தது. ஆனால், இதுகுறித்தான முடிவுகளை விவசாய அமைப்புகள் டிசம்பர் 5ஆம் தேதியே மத்திய அரசு அமல்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்தன. அதனால் தான், எங்களின் கருத்துகளை மத்திய அரசிடம் தெரிவிக்க டிசம்பர் 4ஆம் தேதி முன் கூட்டியே கூடினோம். அது முழுமைபெறவில்லை.

நாங்கள் வேளாண்திருத்தச் சட்டங்களே வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறோம். அதனால் டிசம்பர் 5ஆம் தேதி(இன்று) மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளோம்' என்றார்.

மற்றொரு விவசாய சங்கத் தலைவர் ஹர்ஷ்வின்டர் சிங் கூறுகையில், ' மத்திய அமைச்சர், வேளாண் திருத்தச் சட்டங்களில் இருக்கும் குறைகளைக் கேட்டறிந்தார். மத்திய அரசு எங்களிடம் இது குறித்து பரிசீலிப்பதாக கூறியதால், நாங்கள் இதுகுறித்து அரசிடம் தெரிவிப்போம். இதுகுறித்து டிசம்பர் 5ஆம் தேதி(இன்று) மீண்டும் கூடுவோம். விவாதிப்போம்' எனத் தெரிவித்தனர்.

மற்றொரு பஞ்சாப் மாநில விவசாய சங்கத்தலைவர் குல்தீப் சிங் பேசுகையில், '4ஆவது சுற்று பேச்சுவார்த்தை சரிவர முடியவில்லை. மத்திய அரசின் நோக்கம் சரிவர இல்லை. மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. ஆனால், நாங்கள் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை, போராட்டத்தை விடுவதாக இல்லை' என உறுதிபடத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 3:45 மணி நேர பேச்சுவார்த்தை... தேநீரைகூட அருந்தாத விவசாயிகள்: நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.