ETV Bharat / bharat

'வேளாண் துறை அமைச்சர் எழுதிய கடிதத்தை விவசாயிகள் படிக்கவேண்டும்' -பிரதமர் மோடி - வேளாண் சட்டங்கள் மோடி

டெல்லியில் விவசாயிகள் போராடிவரும் சூழ்நிலையில், உழவர்களுக்கு வேளாண் துறை அமைச்சர் எழுதிய கடிதத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மக்கள் அதனை அதிகமாக பகிரவேண்டும் என வேண்டுகொள் விடுத்துள்ளார்.

farmers should read agri minister letter says modi
வேளாண் துறை அமைச்சரின் கடிதத்தை குறிப்பிட்ட தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி
author img

By

Published : Dec 19, 2020, 8:32 PM IST

டெல்லி: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில், விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். நாடுமுழுவதும், இந்தப்போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், அடையாள உண்ணாவிரதங்கள் போன்றவை நடைபெற்றுவருகிறது. கனடா பிரதமரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

ஆனால், சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படாததால், போராட்டமானது தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், சில அரசியல் கட்சிகள் விவசாயிகளை குழுப்பிவருவதாகவும், மத்திய அரசுக்கு எதிர்ப்பதற்காக வேளாண் சட்டங்கள் குறித்த பொய் செய்திகளை சில குழுக்கள் பரப்பிவருவதாகவும் தெரிவித்து ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இரண்டு நாட்களுக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். விவசாயிகளின் குழப்பத்தை தெளிவுபடுத்துவதற்காகவே அந்த கடிதத்தை எழுதியதாக வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார்.

  • இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். https://t.co/AogA94ny7E

    — Narendra Modi (@narendramodi) December 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், இந்த கடிதம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். அவருடைய ட்விட்டரில், "வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், வேளாண்துறை அமைச்சரின் கடிதத்தையும் இணைத்து மக்கள் அதிகமாகப் பகிர வேண்டும் என வேண்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: வேளாண் சட்டங்களின் நன்மை குறித்து விவசாயிகளிடையே உரையாற்றும் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.