மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அம்பாலா குருக்ஷேத்ரா கைதல் மற்றும் கர்னல் மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதாக ஹரியானா அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, நேற்று (செப்.29) அன்று மாநிலத்தின் அரசுக் கிடங்குகளில் நெல் கொள்முதல் செய்வதற்கான அறிவுறுத்தல்களையும் அம்மாநில அரசு வழங்கியது.
ஆனால், மாநிலத்தில் எந்தவொரு கிடங்கிலும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், பாரதிய கிசான் யூனியனின் மாநிலத் தலைவர் குர்ணம் சிங் சாதுனியின் தலைமையில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுக் கிடங்குகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய விவசாயி ஒருவர், மாநில அரசு நெல் கொள்முதலைத் தொடங்கும் வரை காலவரையின்றி போராட்டம் நடத்துவோம். விவசாயிகளுக்கு எதிரான முடிவுகளை மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்து வருகின்றன.
மத்திய அரசு, விவசாயிகளின் எதிர்ப்பை மீறி வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது. இதுவரை, மாநிலம் முழுவதும் விவசாயிகளிடம் இருந்து ஒரு சிறு தானியம் நெல் கூட கொள்முதல் செய்யப்படவில்லை. நாங்கள் எந்தவொரு கட்சியின் கீழும் செயல்படவில்லை. எங்களுக்கு எது சரி, எது தவறு என்பதை நாங்களே தீர்மானிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.