தெலங்கானா மாநிலம் சித்திபேட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி எல்லையா. இவர் தனது விவசாய நிலத்திற்கு யூரியா வாங்குவதற்காக கடந்த இரு நாட்களாக உரக்கடையின் முன்பு வரிசையில் நின்றுள்ளார்.
இந்நிலையில், இவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
விவசாயத்திற்கு தேவையான உரப்பொருட்களின் வரத்து குறைந்துள்ளதால், உரப்பொருட்களை வாங்க விவசாயிகள் ஒரே நேரத்தில் அதிகளவில் கடையின் முன்பு குவிந்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நெரிசல் அதிகளவில் இருந்துள்ளது. எல்லையா இறந்ததற்கு முறையான நடவடிக்கை இல்லாமையே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.