ETV Bharat / bharat

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி

சண்டிகர் : வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றுவந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், விவசாய சங்கங்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
author img

By

Published : Nov 24, 2020, 3:55 PM IST

விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்தச் சட்டங்களுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தளக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விமர்சித்து வருகின்றன. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் விவசாய சங்கங்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (நவ.23) நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டத்தை விவசாய சங்கங்கள் முன்னதாகத் திரும்பப்பெற்றன. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்தும், கடந்த இரண்டரை மாதங்களாக ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டும் வந்தனர். இதனால், சரக்கு ரயில் சேவை பெரும் பாதிப்படைந்து கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் 30 சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளன. மத்திய அரசின் சார்பில் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.