இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அந்த வகையில், புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடியிலும் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், சுங்கச்சாவடி வழியாக செல்லும் கார், ஜீப் பயணிகள் வேன் ஆகியவற்றுக்கு 45 ரூபாய், வணிக வாகனங்களுக்கு 75 ரூபாய் என முந்தைய தொகையே வசூலிக்கப்பட்டு வருகிறது. அதே போல், கனரக லாரிகள், பயணிகள் பேருந்து ஆகியவற்றுக்கான கட்டணம் 145 ரூபாயிலிருந்து 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 155 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
கார், ஜீப், பயணிகள் வேன், பள்ளிப் பேருந்துகள் ஆகியவற்றுக்கான கட்டணங்கள் மட்டும் உயர்த்தப்படாதது குறிப்பிடத்தக்கது.