ஸ்ரீநகரின் பழைய பார்சுல்லா பகுதியைச் சேர்ந்த மன்சூர் அஹ்மத்தின் மகன் சாகிப் மன்சூர். 24 வயதான சாகிப் மன்சூர் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த 5 ஆம் தேதி காணாமல் போனதாக இவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, ஆக. 7ஆம் தேதி சாகிப் மன்சூர், பயங்கரவாத குழுவில் சேர்ந்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதையடுத்து சாகிப் மன்சூரின் பெற்றோர், அவனிடம் வீடு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சிறப்புச் சட்ட நீக்கத்திற்குப் பின் ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு; இதுதான் பொருளாதார முன்னேற்றமா?'