தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், போலி விசாக்களை தயாரிக்கும் பணியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்று அங்கு சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சயிக் பஷீர் அகமது, பாலூ பிரசாத் உள்ளிட்ட ஏழு பேரிடமிருந்து 13 போலி விசாக்களை கைப்பற்றினர்.
மேலும், அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புடைய பொருட்களையும், பறிமுதல் செய்துள்ளனர். தற்போது அவர்கள் ஏழு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : மருத்துவர்களையும் விட்டு வைக்காத கொரோனா - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!