ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெஹகபூபா முப்தியின் மீது தொடுக்கப்பட்ட பொதுப்பாதுகாப்புச் சட்டத்தை நீட்டித்து தொடர்ந்து அவரை வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசமைப்பு உறுதிசெய்துள்ள உரிமை மீது தாக்குதல் நடத்தும் செயல் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
61 வயதான மெஹபூபா முப்தி, பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளாரா? என்று கேள்வி எழுப்பிய அவர், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் தானும் ஒருவன். அதனால், தானும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நபரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மெஹபூபா முப்தியை உடனடியாக விடுதலை செய்யக் கோரி ஒருமித்த குரல் எழுப்பவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மெஹபூபா முப்தி மீது தொடுக்கப்பட்ட பொதுப்பாதுகாப்புச் சட்டம் நேற்று (ஜூலை 31) மேலும் மூன்று மாதம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காஷ்மீரில் தொடரும் பாகிஸ்தானின் அட்டூழியம்: ராணுவ வீரர் வீர மரணம்