உலகப் பெருந்தொற்றான கரோனா மார்ச் மாதம் தீவிரமாகப் பரவத் தொடங்கியதையடுத்து, உலகம் முழுவதும் விமானம், கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கான சரக்குப் போக்குவரத்து மட்டுமே நடைமுறையில் இருந்துவந்த நிலையில், இரண்டு மாதம் கழித்து தற்போது அன்றாட வர்த்தக நடவடிக்கை மெல்ல செயல்படத் தொடங்கியுள்ளது.
அதன்படி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கன்டாலா துறைமுகத்திலிருந்து இன்று வங்கதேசத்திற்கு வர்த்தகப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
இன்று சுமார் 100க்கும் மேற்பட்ட சரக்கு லாரி ஓட்டுநர்கள் துறைமுகத்திற்கு சரக்கு கொண்டுவந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட உரிய விதிமுறைகளைப் பின்பற்றியே செயல்படத் தொடங்கியுள்ளனர் என துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சரக்கு இறக்கி வைக்கப்பட்டதும் வாகனங்களை உரிய முறையில் கிருமிநாசினி கொண்டு தூய்மைபடுத்தியப் பின்பே வெளியே அனுமதிக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து மற்ற மாநில துறைமுகங்களிலும் சரக்குப் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவத்துள்ளது.
இதையும் படிங்க: பத்திரிகை தகவல் மையத்தின் தலைவருக்கு கரோனா