மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி கடந்த வாரம் சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறிவந்தனர்.
இதையடுத்து ஏரியில் நிகழ்ந்துள்ள நிற மாற்றத்திற்கு என்ன காரணம் என வனத்துறையினர் பரிசோதனை செய்ய விரைந்தனர்.
ஏரியின் நிற மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஏரியிலுள்ள நீர் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பியுள்ளனர்.
ஆய்விற்குப் பின்னர் ஏரியின் நிற மாற்றத்திற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள தேசிய சுற்றுச்சூழல் ஆய்வகம் நாளை மறுநாள் ஏரியின் நிறமாற்றம் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஏரி தனது நிறத்தை மாற்றிக்கொள்வது இது முதல்முறை அல்ல என்றும், முன்னதாகவே, பலமுறை இதுபோன்ற நி்றமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவித்தார்.
மக்களின் அச்சுறுத்தல் காரணமாக மாவட்டத்திலுள்ள தேசிய சுற்றுச்சூழல் ஆய்வகத்தினர் நிறமாற்றம் குறித்து வரும் திஙகள் கிழமை ஆய்வு செய்யவுள்ளனர் எனத் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே, இந்த ஏரி புவியியில் சார்ந்த சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.