இதுதொடர்பாக தெலங்கானா மாநில சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய நிதின் கட்கரி, "வங்கிக் கடன்களுக்கான தவணை தொகையை மூன்று மாதங்கள் ஒத்திவைக்க ரிசர்வ் வங்கி அறிவித்த பிறகும், சிறு குறு நிறுவனங்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தச் சூழலில் அந்நிறுவனங்களுடன் மத்திய அரசு துணை நிற்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அரசின் சிரமங்களை நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அமெரிக்கா, ஜப்பான் போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் மெகா பேக்கேஜுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் அனைவரையும் பாதுகாக்கும் நோக்கில் எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இன்னும் இரண்டு மூன்று நாள்களில் மத்திய அரசு உதவித் தொகை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க : அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தமா? - நிதியமைச்சகம் விளக்கம்