கரோனா அச்சுறுத்தலால், புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், கடந்த 40 நாள்களுக்கும் மேலாக மதுபான குடோன்கள், மதுபான கடைகள், கள்ளு மற்று சாராய கடைகள் என அனைத்தையும் மூடி கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர்.
இதனால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல், கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து மது வாங்கி குடித்து வந்தனர். இதற்கிடையே புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகளில் உள்ள மதுபான மொத்த இருப்புகள் குறித்து கலால் துறை சார்பில் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டது. அப்போது, குறைவான மதுபானங்களை வைத்திருந்த 25க்கும் மேற்பட்ட மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் இரண்டாவது முறையாக புதுச்சேரி அண்ணா சாலை உள்ளிட்ட மதுபானக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைக் கண்டு, கடை திறந்துவிட்டார்கள் என நினைத்து மதுப்பிரியர்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து அவர்களை அங்கிருந்து காவல் துறையினர் அகற்றினர். அதன் பின்னர் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: செவிலியருக்குத் தலை வணங்கிய கிரண் பேடி!