ஹைதரபாத் : தெலங்கானாவில் நான்கு மண்டலங்களை தவிர்த்து வேறெங்கும் கரோனா நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
குளிர் காலங்களின் கரோனா நோய்க் கிருமித் தொற்றின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், அதனை கருத்தில்கொண்டு துரிதமாக செயல்பட வேண்டும் என சுகாதாரப் பணியார்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மோதி விபத்து; 24 பேர் உயிரிழப்பு
மேலும், தெலங்கானாவில் எல்.பி. நகர், மலக்பேட், சார்மினார், கரவான் ஆகிய மண்டலங்களை தவிர அனைத்து இடங்களும் பச்சை நிற பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும், மாற்றபட்ட மண்டலங்களின் எந்த நோய்க் கிருமித் தொற்றும் புதிதாக இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா கிருமித் தொற்று குறித்து பயப்பட ஒன்றுமில்லை. பெரும்பான்மையான மக்கள் நோய்க் கிருமித் தொற்றிலிருந்து மீண்டு வருகின்றனர். தெலங்கானாவில், கோவிட்-19 காரணமாக இறந்தவர்களின் விழுக்காடு 2.38 மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க ஆளுநரை கலாய்க்கும் திரிணாமுல் எம்.பி!
“இன்று முதல், மாநிலத்தின் நான்கு மண்டலங்களை தவிர்த்து அனைத்து பகுதிகளிலும், குளிர்சாதப் பெட்டிகள் விற்பனை செய்யும் கடைகள், வாகன விற்பனை அங்காடிகள், வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும்.
மேலும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் மாநிலம் முழுவதும் செயல்படும். ஊரடங்கின் வேறு நெறிமுறைகள் பின்பற்றப்படும்” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.