ETV Bharat / bharat

முன்னாள் பிரதமர்களுக்கு இனி எஸ்பிஜி பாதுகாப்பு இல்லை - மத்திய அரசு ஒப்புதல்!

முன்னாள் பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கி கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

spg
author img

By

Published : Nov 23, 2019, 7:45 AM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர்களான சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா காந்திக்கு 18 ஆண்டுகளாக எஸ்பிஜி எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தற்போது நேரடியாக எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லாததால் எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதற்கு பதிலாக அவர்களின் குடும்பத்திற்கு "Z +" பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதேபோன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த, ஸ்பெஷல் ப்ரொடெக்சன் குரூப்பின் (SPG) பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரசின் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் ஒன்றை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த திருத்தம் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முன்னாள் பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு இனி எஸ்.பி.ஜி. என்ற சிறப்பு பாதுகாப்பை விலக்கி கொள்ளும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டதிருத்தத்தின் மூலம் இனி பிரதமருக்கு மட்டுமே எஸ்பிஜி என்ற சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: ராஜிவ் காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ்!

Intro:Body:

spg

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.