ETV Bharat / state

காவல் நிலையத்திலேயே கத்தி குத்து.. தங்கையின் கணவர் மீது இளைஞர் வெறிச்செயல்.. ஆவடியில் பரபரப்பு..!

ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் விசாரணையின் போது தங்கை கணவரை அண்ணன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் மற்றும் சிகிச்சையில் குரு சத்யா
கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் மற்றும் சிகிச்சையில் குரு சத்யா (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 4:52 PM IST

திருவள்ளூர்: ஆவடி காமராஜர் நகர், தாமரை தெருவைச் சேர்ந்தவர் குரு சத்யா (32). கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா (24). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குரு சத்யாவுக்கு, ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த 30 வயது பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, திவ்யா விவாகரத்து கோரி பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இந்நிலையில், திவ்யா தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனது தாயுடன் வசித்து வருகிறார். அங்கு அடிக்கடி செல்லும் குரு சத்யா திவ்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: "கஸ்தூரி முன்ஜாமீன் கோரிய மனு".. ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை துவக்கம்!

இதனால் ஆத்திரமடைந்த திவ்யா ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாலை இருவரும் வழக்கு விசாரணைக்கு சென்ற போது குரு சத்யா, திவ்யாவை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திவ்யாவின் அண்ணன் மகேஸ்வரன் (26) வீட்டில் இருந்து காய் நறுக்கும் கத்தியை கொண்டு வந்துள்ளார். காவல் நிலையத்தின் உள்ளே குரு சத்யாவிடம் விசாரணை நடைப்பெற்று கொண்டு இருந்த போது அங்கு காத்திருந்த மகேஸ்வரன் குரு சத்யாவை முதுகில் குத்தியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

மகளிர் போலீசார் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், இரவு மேல் சிகிச்சைக்காக முதுகில் பாதி உடைந்த கத்தியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தப்பிய மகேஸ்வரனை கைது செய்த ஆவடி போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் விசாரணையின் போது தங்கை கணவரை அண்ணன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.