ETV Bharat / bharat

பெங்களூரு கலவரம்: முக்கிய குற்றவாளி தலைமறைவானார்! - எம்.எல்.ஏ சீனிவாஸ் மூர்த்தி

பெங்களூரு: கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குற்றவாளி மேயர் சம்பத் ராஜ் தலைமறைவாகியுள்ளார்.

Bengaluru riots case
Bengaluru riots case
author img

By

Published : Oct 30, 2020, 9:33 PM IST

Updated : Oct 30, 2020, 9:39 PM IST

பெங்களூருவில் ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாச மூர்த்தியின் உறவினர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்தை கண்டித்து பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் எம்எல்ஏ வீடு சூறையாடப்பட்டது மட்டுமின்றி டி.ஜே., ஹள்ளி மற்றும் கே.ஜி., ஹள்ளி போலீஸ் ஸ்டேஷன்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த கலவரத்தின் போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர்‌. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கலவரத்திற்கான முக்கிய நபரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணை சமீபத்தில் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) மாற்றப்பட்டது. இதையடுத்து, களத்திலிறங்கிய என்ஐஏ பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தி ஏர்கன், கூர்மையான ஆயுதங்கள், இரும்பு தடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்‌. கலவரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சமர்ப்பித்த 400 பக்கம் அறிக்கையில், 60 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, முன்னாள் மேயர் சம்பத் ராஜ் மற்றும் முன்னாள் கார்பரேட்டர் ஜாகிர் உசேன் ஆகியோரின் பெயர்கள் கலவத்திற்கு முக்கியமான நபர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

விசாரணையில் இந்தக் கலவரம் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்திக்கு எதிரான காங்கிரஸின் அரசியல் விரோதமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கலவரத்தின் குற்றவாளிகளை கைது செய்ய சிசிபி தரப்பில் தனிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேயர் சம்பத் ராஜ், கரோனா தொற்றின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில், மருத்துவமனைக்குச் சென்று துணை காவல் ஆணையர் வேணுகோபால் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்தான் அவர் தலைமறைவாகியுள்ளது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Last Updated : Oct 30, 2020, 9:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.