கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் சார்பில் நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச ராமாயண நிகழ்ச்சியில், உள் துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ராமாயண நூல் பழமையான இந்தியக் கலாசாரத்தின் பொக்கிஷம் என்றும், உலகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் அதில் தீர்வு உள்ளது என்றும் கூறினார்.
மேலும் பேசிய அமித்ஷா, ”ராமாயணம் மகரிஷி வால்மீகியின் ஈடு இணையற்ற படைப்பு. மனித வாழ்க்கையில் உண்டாகும் உயர்வு தாழ்வை மிக அற்புதமாக விளக்கி ராமாயணத்தை எழுதியிருப்பார். கடினமான சூழலிலும் கூட எவ்வாறு ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை எளிமையாக கூறியிருப்பார். எனவே அனைவரும் கட்டாயமாக ராமாயண நூலைப் படித்து சிறந்த மனிதனாக மாற முயற்சிக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.