ETV Bharat / bharat

கடவுளே நினைத்தாலும் அனைவருக்கும் அரசு வேலை தர இயலாது - பிரமோத் சாவந்த்

பனாஜி: கடவுளே நினைத்தாலும் வேலை தேடும் அனைவருக்கும் அரசு வேலை தர இயலாது என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

goa cm
swayampurna mitra
author img

By

Published : Oct 31, 2020, 4:51 PM IST

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்விதமாக ‘ஸ்வயம்பூர்ணா மித்ரா’ என்ற புதிய திட்டத்தை கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தொடங்கிவைத்தார். இதன் பின்னர் அவர் இணைய வழி கூட்டத்தில் உரையாடியபோது கூறியதாவது:

நாளை கடவுளே முதலமைச்சர் ஆனாலும் அவர் அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது.

ஸ்வயம்பூர்ணா மித்ரா என்ற இந்தப் புதிய முயற்சியின் மூலம் அரசு அலுவலர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று அங்குள்ள வளங்களுக்கு ஏற்ப அந்தப் பகுதி மக்களுக்கு சுயசார்பு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

இதன்மூலம் மாதத்துக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை வருமானத்தை ஈட்டுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். பிற பகுதியிலிருந்து வந்து வேலை செய்வதற்கு ஏற்ப கோவா மாநிலத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

அந்த வகையில ஸ்வயம்பூர்ணா மித்ரா திட்டத்தின் மூலம் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு சின்ன சின்ன வேலைகளை உருவாக்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக இம்மாத தொடக்கத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சியில், கோவா மாநிலத்தில் அதிகரித்துவரும் வேலையின்மை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார் முதலமைச்சர் பிரமோத் சாவந்த். இதைத்தொடர்ந்து தற்போது ஸ்வயம்பூர்ணா மித்ரா என்ற புதிய முயற்சியின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும பணியை தொடங்கியுள்ளார்.

தற்போது கோவா மாநிலத்தில் உள்ள வேலையின்மை விகிதம் 15.4 சதவீதமாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.