இது குறித்து ஈடிவி செய்திகளுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் டிஜிட்டல் மீடியா துறையில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. 13மொழிகளை ஒரே செயலியில் உள்ளடக்கி தரமான செய்திகள் மற்றும் அற்புதமான அம்சங்களை தனித்துவமாக வழங்கும் ஒரே நாடு ஒரே செயலி என புகழாரம் சூட்டினார்.
சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த தளம் நல்ல அடித்தளமாக அமையும். ஆகையால் அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ளவேண்டும். செய்தி போர்டலில் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ள ஈடிவி பாரத் அனைத்து மக்களையும் சென்றுசேர வேண்டும் என்றார்.
21வயதான அணுகீர்த்தி வாஸ் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றார். அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'கருத்துகளை பதிவு செய்' படத்தை வியந்து பாராட்டிய தணிக்கைக் குழு