உத்தரகாண்ட் மாநிலம் புரோலா பகுதியில் ரூபின் ஆற்றின் குறுக்கே உள்ள பழமை வாய்ந்த பாலம் ஒன்று எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. கெடா வேலி என்ற இடத்தில் இருந்து லிவாடி, ஃபிடாரி, ராலா, ரெக்சா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலம் சமீபத்தில் இடிந்து ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து ஆற்றின் குறுக்கே மரக்கட்டைகளை போட்டு அப்பகுதினர் ஆபத்தான முறையில் கரையைக் கடந்து வந்தனர். இந்த நிலையில் பொதுமக்களின் ஆபத்தான நிலையை உணர்ந்து ஈடிவி பாரத் செய்திக்குழு இது குறித்த செய்தியை வெளியிட்டது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தற்காலிக பாலம் அமைக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது.