ETV Bharat / bharat

சின்மயானந்தாவை உத்தரப் பிரதேச அரசு காப்பாற்றுகிறது - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு - சின்மயானந்தா

டெல்லி: சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் சின்மயானந்தாவை உத்தரப் பிரதேச அரசு காப்பாற்றுகிறது என பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Priyanka
author img

By

Published : Sep 29, 2019, 2:34 PM IST

பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா உத்தரப் பிரதேசத்தில் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சின்மயானந்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி மாயமானார்.

இதனால் மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்தா, தன் மகளை கடத்தியாகப் புகார் அளித்தார். இதற்கிடையே, காணாமல்போன சட்டக் கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டு கொண்டுவந்த உத்தரப் பிரதேச காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக பணம் பறிப்பதற்காக சட்டக்கல்லூரி மாணவி தன்னை பாலியல் வழக்கில் சிக்க வைத்ததாக பாஜக மூத்தத் தலைவர் சின்மயானந்தா வழக்குத் தொடர்ந்தார். பணம் பறிப்பு வழக்கில் தன்னை கைது செய்வதிலிருந்து தடைவிதிக்கக் கோரி, சட்டக்கல்லூரி மாணவி அலகாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். பின்னர், சட்டக்கல்லூரி மாணவியை காவல்துறையினர் கைது செய்து 14 நாட்கள் சிறையில் அடைத்தனர்.

இதனை கடுமையாக விமர்சித்துள்ள பிரியங்கா காந்தி, "சின்மயானந்தாவை காப்பாற்ற பார்ப்பதால்தான் அவருக்கு எதிராக பாலியல் வன்புணர்வு வழக்கைப் பதிவு செய்ய உத்தரப் பிரதேச அரசு மறுக்கிறது. ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் அரசு அலுவலர்கள் சின்மயானந்தாவுக்கு ஆரத்தி எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் தன் நிலைமையைக் கூறிய பின்னரும் கூட யோகி அரசு அவருக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது" என்றார்.

இதையும் படிங்க:

சின்மயானந்தாவுக்கு முன் ஜாமின் மறுப்பு!

Intro:Body:

https://www.ndtv.com/india-news/entire-administration-protecting-embracing-chinmayanand-priyanka-gandhi-2108971

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.