கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது மே 31ஆம் தேதி வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த தளர்வுகளின் அடிப்படையில் மாநிலங்கள் மதுபானக் கடைகளைத் திறந்தன. வெகுநாள்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், தகுந்த இடைவெளியின்றி கூட்டம் அலைமோதியது.
இதனைக் கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் மதுபானங்களை, வீட்டுக்கே சென்று வழங்கும் ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இந்நிலையில், 'டெல்லியில் விற்பனை செய்யப்படும் மதுவில் 10 முதல் 15 விழுக்காடு மட்டும்தான், முறையாக ஸ்கேன் செய்து விற்கப்படுகின்றன. இது சட்டத்திற்கு புறம்பானது' என துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது, 'மதுபானப் பாட்டில்களுக்கு சிறப்புக் கரோனா கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. தவறான விற்பனை விவரங்கள் பதிவு செய்யக்கூடாது. முறையான ஸ்கேனிங் அவசியம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைனில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி - மும்பை குடிமகன்கள் மகிழ்ச்சி