இந்தியாவில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 452ஆக உள்ள நிலையில், உயிரிழப்பு 723ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகளுடன் அனைத்து அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிவருகின்றன.
இந்நிலையில், பாதுகாப்புத் துறையின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவான ஆய்வை ராஜ்நாத் சிங் மேற்கொண்டார். பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ளும் விதமாக பாதுகாப்புத் துறையின் அனைத்துப் பிரிவுகளும் தயாராக உள்ளதா என பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதியிடம் காணொலிக் காட்சி மூலம் கேட்டறிந்தார்.
மேலும் சுகாதாரத் துறை அமைச்சகத்துடன் 24 மணி நேரமும் நேரடி தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்திய ராஜ்நாத் சிங், இந்த போர்க்கால சூழலில் பேரிடரைச் சமாளிக்க அனைத்து வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார். மேலும் இக்கட்டான சூழலில் பொருளாதாரச் சுமையைச் சரிசெய்யும் விதமாக, தேவையற்ற செலவீனங்களைக் குறைக்கவும் அமைச்சகத்துக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தனி விமானம் மூலம் கரோனா பரிசோதனைக்கு வந்த மத்தியப்பிரதேச மாதிரிகள்!