ETV Bharat / bharat

ஜம்முவில் மீண்டும் துப்பாக்கிச்சண்டை...! - பயங்கரவாதி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் இந்திய பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுவருகிறது.

ஜம்மு துப்பாக்கிச்சண்டை
author img

By

Published : Mar 22, 2019, 10:14 AM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் அமைந்துள்ள இமாம் ஷாகிப் பகுதியின் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

இந்நிலையில் பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் செயல்பட்டனர்.

தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுவரும் நிலையில், பாதுகாப்புப் படையினரிடம் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.