காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்படுவது தொடர்ந்துவருகிறது. கடந்த சில நாள்களாகவே காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், குல்காம் மாவட்டத்தின் மன்ஸ்காம் பகுதியில் பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 34ஆவது ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப்பிரிவினரும், மத்திய ரிசர்வ் படை காவலர்களும் பிரிவினைவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். அப்போது தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பிரிவினைவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க:போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: பூஞ்ச் எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்