ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று காலை (ஆக.22) பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதி ஒருவருக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கிரேரி அருகேவுள்ள செக்-இ-சலூசா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாதுகாப்புப் படையினர் அதற்கு பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி கொல்லப்படார்.
முன்னதாக, ஆகஸ்ட் 18ஆம் தேதி, வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கிரீரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: மொபைலில் தலாக் சொன்ன கணவன்: நீதி கேட்டு முதலமைச்சரிடம் சென்ற பெண்!