ETV Bharat / bharat

பசியை திருப்திபடுத்தும் வேலை உறுதியளிப்பு சட்டம்! - mgnrega

போதுமான பணம் அல்லது உணவு இல்லாத சூழலில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்தான் இப்போது அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 7 கோடி  குடும்பத்துக்கு வேலை உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு பொது ஊரடங்கு காரணமாக வெறும் 34 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும்தான் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

வேலை உறுதியளிப்பு சட்டம்
வேலை உறுதியளிப்பு சட்டம்
author img

By

Published : Jul 12, 2020, 5:48 PM IST

தினசரி உணவுக்கான ஆதாரத்தைத்தேடி நகரங்களை நோக்கிச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக நாம் இருக்கின்றோம். இந்த கரோனா கால சூழல் காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்த அவர்கள் இப்போது அரை மனதுடன் தங்கள் வீடுகளை நோக்கித் திரும்பிச் செல்கின்றனர். வாழ்க்கைக்கான அச்சுறுத்தல் அவர்கள் ஒவ்வொருவரையும் வேட்டையாடுகிறது. இதயம் நிறைய உணர்வுகளுடன் இப்போது அவர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கிப் பயணப்பட்டிருக்கின்றனர்.

வேலை உறுதியளிப்பு...

போதுமான பணம் அல்லது உணவு இல்லாத சூழலில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்தான் இப்போது அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 7 கோடி குடும்பத்துக்கு வேலை உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தாண்டு பொது ஊரடங்கு காரணமாக வெறும் 34 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும்தான் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. தொலைதூர கிராமங்களில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் கருத்திற்கொண்டு, அவர்கள் பணி அமர்த்தப்பட்டதின் அளவை ஜூன் மாத புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை பிரதிபலிக்கிறது.

ஒற்றை இலக்கத்தில் கரோனா பாதிப்பு; ஐநா பாராட்டு - உலகிற்கு ரோல் மாடலான 'தாராவி'!

இந்த நிதியாண்டில், 7.3 கோடி மக்கள், வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்காக விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 2 கோடிக்கும் மேலானவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். 2019ஆம் ஆண்டில் 1.45 கோடி பணியாளர்களுக்கு தகுதியான வேலை கொடுக்கப்படவில்லை. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி இந்தாண்டு இது இரண்டு மடங்கு ஆகும். இந்த எண்ணிக்கை, பொருளாதார அறிஞர்களை மிகவும் வருத்தமடைய வைத்ததுடன், குழப்பம் அடையவும் செய்துள்ளது.

நிதி ஒதுக்கீடு...

மத்திய நிதிநிலை அறிக்கையில் முன்பு ஒதுக்கப்பட்ட 61ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலே, ஆத்ம நிபார் பாரத் (சுவாவலம்பம் பாரத் அல்லது தற்சார்பு இந்தியா) என்ற உத்தியின் ஒரு பகுதியாக ஊரக வேலை உறுதியளிப்பு திட்டதின் கீழான நிதி ஒதுக்கீடாக 40ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மானியமாக மத்திய அரசு கொடுத்துள்ளது. அந்த அளவுக்கு, அரசானது 300 கோடி வேலை நாட்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இது ஏழைகளுக்குப் பயனற்றதாக இருக்கும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.

வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்

ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு, குறைந்தபட்சம் 100 நாட்களாவது வேலை தருவதை இந்த ஊரக வேலைவாய்ப்பு சட்டம் உறுதி அளிக்கிறது. இந்த நூறு நாட்கள் வேலை வரம்பு ஏற்கனவே 40 லட்சம் குடும்பங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னொரு 23 லட்சம் குடும்பங்களுக்கு இதே போன்ற திட்டத்தில் ஏற்கனவே 60 நாட்கள் வேலை வழங்கப்பட்டுள்ளது.

கரோனா கவச்: காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளுங்கள்!

லட்சகணக்கான குடும்பங்கள், தினசரி அடிப்படையில் வேலை பார்க்க முடியாவிட்டால், தங்களது பசியை அவர்களால் போக்கிக் கொள்ளமுடியாது. பசியின் காரணமாக தங்கள் வாழ்க்கையை இழப்பதில் இருந்து இதுபோன்ற குடும்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற தேவைகள் வேண்டும் குடும்பங்களுக்கு உணவு அளிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு என்று இத்தனை நாட்கள் என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய அரசு முயற்சிகள் எடுக்கவேண்டும்.

கரோனா வறுமை

கோவிட்-19 தொற்றுவதை தடுக்கும் இலக்கில் பொது ஊரடங்கின் காரணமாக கிராமப் புறங்களில் 2.80 கோடி நபர்களும், நகர்புறங்களில் 1.20 கோடி நபர்களும் வலுக்கட்டாயமாக வறுமையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த குறிப்பிட்ட பெருந்தொற்று காரணமாக நாட்டின் 47 விழுக்காடு மக்கள் தொகையினர் தீவிரமான ஏழ்மையில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக, நகரங்களில் பணியாற்றி வந்த ஊழியர்கள் நேற்று வரைக்கும், தொழிலக பணியாளர்கள் என்ற வகையில் தங்களுடைய வேலை நாட்கள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று உணர்ந்திருந்தனர்.

டிக்டாக் ரசிகர்களே உஷார்... கைபேசி பயனர்களைக் குறிவைக்கும் 'டிக்டாக்' போலி செயலிகள்!

வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்படி, மத்திய அரசு கொடுக்கப்படும் நிதியை 11 விழுக்காடு அதிகப்படுத்திய போதிலும் கூட, ஒரு விவசாய கூலியின் குறைந்த பட்ச ஊதியத்தை விடவும் 40-50 விழுக்காடு குறைவாகவே இருக்கிறது. அடிமட்ட அளவில் தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் இந்த திட்டத்தின் பலன்கள் கிடைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை பரவலாக்க வேண்டும். இந்த திட்டத்தின் நிர்வாகத்தில் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை களைவது மட்டுமின்றி, கிராமங்களில் இருந்தும், சிறுநகரங்களில் இருந்தும் பெரிய நகரங்களுக்கு புலம் பெயரும் தொழிலாளர்களையும் இது தடுத்து நிறுத்தும்.

மத்திய ஊரக வளர்ச்சி துறையின் அறிக்கை

சமீபத்தில் வெளியான மத்திய ஊரக வளர்ச்சி துறையின் அறிகையில், வேலை கேட்டு வருபவர்களுக்கு அரசால் வேலை கொடுக்கமுடியவில்லை என்றும், 2019ஆம் ஆண்டு வெறும் 46 நாட்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. 2019 - 2020ஆம் நிதி ஆண்டில், மத்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில், இதற்காக 68ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி செலவிட்டது. கிராமங்களில் உள்ள 5.48 மில்லியன் குடும்பங்களுக்கு சராசரியாக 48 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதில் 49ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் கூலியாக தரப்பட்டுள்ளது.

காரீப் கல்யாண் யோஜனா திட்டம்

காரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ரூ.50ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. 6 மாநிலங்களில் 116 மாவட்டங்களுக்கு வந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இது அமல்படுத்தப்படுகிறது. அனைத்து அம்சங்களிலும், நாட்டின் வேலை உறுதியளிப்புத் திட்டத்தை வளப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்பதை இது நிருபித்துள்ளது.

உமீட் திட்டம்: வேலையற்ற இளைஞர்களின் வாழ்வை வளமாக்கும் பால் உற்பத்தி

கரோனா நோய் தொற்று காரணமாக, சமூக விலகலை கடைபிடிப்பதால், கிணறு வெட்டுதல், தண்ணீர் கால்வாய்கள் வெட்டுதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற வளர்ச்சித் திட்டங்களையும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. பெருந்தொற்று முழுமையாக ஒழிக்கப்படும் வரை நாடு முழுவதும் வேலை உறுதியளிப்பு, உறுதி செய்யப்பட வேண்டும்.

விடியல்...

பொது நலனுக்காக வடிவமைக்கப்பட்ட சொத்துகளை கட்டமைக்க , தரகர்களை ஒழிக்கும் வகையில், மத்திய அரசுக்கு அனைத்து மாநில அரசுகளும் கைகொடுத்து உதவுவதற்கு இது சரியான தருணமாகும். ஏழை தொழிலாளர்கள் தினமும் வேலை பெறமுடியும் என்பதையும், கடின உழைப்பு பலனைத் தரும் என்று சொல்லப்படுவதை நிரூபிக்க அவர்கள் அந்த நாளின் முடிவில் தினக்கூலியை பெற்றுக் கொள்ளவும் இது உறுதியளிக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.