காவல்துறை, ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறை என்று ஒவ்வொரு அவசர உதவிக்கும் ஒரு எண்ணை பயன்படுத்தும் முறை நடைமுறையில் இருந்தது. இந்த சூழலில், நாடு முழுவதும் ஒரே அவசர எண்ணை (112) அழைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் இமாச்சல பிரதேசம் முதலில் இணைந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் அவசர உதவிக்காக ஒரே அவசர எண்ணான 112-ஐ அழைக்கும் முறை இருபது மாநிலங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் திட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட இருபது மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், டையூ மற்றும் டாமன் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.