ETV Bharat / bharat

இந்தியாவை சிறைப்பிடித்த இந்திரா என்னும் சர்வாதிகாரி...

1975 ஜூன் 25. அந்த ஆண்டையும், இந்த நாளையும் நமது முந்தைய தலைமுறை மறந்திருக்காது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜனநாயகத்தை கொலை செய்து எமர்ஜென்சி எனப்படும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நாள் ஜூன் 25.

இந்திரா காந்தி
author img

By

Published : Jun 25, 2019, 5:24 PM IST

1971ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ராஜ்நாராயணன் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நான்கு வருட விசாரணைக்கு பிறகு தேர்தலில் இந்திரா காந்தி பெற்ற வெற்றி செல்லாது எனவும், அவர் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

தனக்கு எதிராக ஒரு தீர்ப்பா, அதுவும் தேர்தலில் போட்டியிட தடையா? வெகுண்டெழுந்தார் இந்திரா. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் ஓய்ந்திருந்த சமயம் அது. அதனையடுத்து அந்த போரால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுவிட்டது, வறட்சி ஏற்பட்டுவிட்டது, உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது என அவரே காரணங்களை உருவாக்கி எமர்ஜென்சி நிலையை கொண்டு வர அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலிக்கு பரிந்துரைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட பக்ருதின் நாடு முழுவதும் எமர்ஜென்சி நிலையை அமல்படுத்தினார்.

ஆரம்பித்தது இந்திராவின் ஆட்டம். முதலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்து தன் மேல் வழக்கு தொடர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் தொடங்கி வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் என எதிர்க்கட்சியினர் அனைவரையும் கைது செய்தார். தனக்கு எதிரான மனப்பான்மையில் வேறு மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருந்தவர்களின் ஆட்சியை அதிரடியாக கலைத்தார். அதில் தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான ஆட்சியும் ஒன்று.

எமர்ஜென்சியை காத்திரமாக எதிர்த்த கருணாநிதி

எமர்ஜென்சி காலத்தில் நாடு நாடாக இருக்கவில்லை. மக்கள் மக்களாக இருக்கவில்லை. இந்தியா என்பது மிகப்பெரிய சிறைச்சாலையாக மாறியது. அரசுக்கு எதிராக பேசிய வாய்கள் அடைக்கப்பட்டன, நடந்த கால்கள் உடைக்கப்பட்டன. எமர்ஜென்சி அமலில் இருந்த 21 மாதங்களில் நாடு முழுவதும் மொத்தம் 1,10,896 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கியமாக நள்ளிரவில் வீட்டுக்கு வந்து ஷாப்பிங் அழைத்து செல்வது போல் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும், பல பேர் கைது செய்யப்பட்டது அவர்களது குடும்பத்தினருக்கே தெரியாமல் இருந்தது. நாடு முழுவதும் இருந்த சிறைச்சாலைகள் ஹவுஸ் ஃபுல் ஆகின. சிறையில் அடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சிக்காரர்கள் கொடூர தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகங்கள் அனைத்தையும் இந்திரா காந்தி ஆக்கிரமித்து தனது ஆக்டோபஸ் அதிகாரங்களை அங்கு செலுத்தினார். எந்த செய்தி வெளியிட்டாலும் அரசின் தணிக்கைக்கு உட்பட்டுத்தான் வெளியிட வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் நாட்டில் நடக்கும் உண்மை நிலவரங்களை சாமானியர்கள் அறிந்துகொள்ளவே முடியாத அவலநிலை நிலவியது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் மக்கள் அனைவரும் அகதியாக்கப்பட்டார்கள்.

அடக்குமுறை
அடக்குமுறை

தமிழ்நாட்டை பொறுத்தவரை எமர்ஜென்சியால் திமுக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஸ்டாலின், முரசொலி மாறன் என ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முரசொலி கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதனையடுத்து வெண்டைக்காய் உடலுக்கு நல்லது என்று தலையங்கத்தை வெளியிட்டார் கருணாநிதி. முரசொலி மட்டுமில்லை ஏராளமான பத்திரிகைகள் அதுமாதிரிதான் தலையங்கத்தை வெளியிட்டன.

இந்திரா காந்தி இப்படி அட்டூழியம் செய்தால், அவரது மகன் சஞ்சய் காந்தியோ, அசுர பலம் கொண்ட அரசு அதிகாரத்தைக் கொண்டு இஸ்லாமிய மக்கள் உட்பட பலரை கட்டாய குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ளச் செய்தார். ஆனால் எதற்காக அவரது மகன் கட்டாய குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ள செய்தார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

சஞ்சய் காந்தி
சஞ்சய் காந்தி

அதுமட்டுமின்றி டெல்லியிலுள்ள டர்க்மான் கேட் மற்றும் ஜாமா பள்ளி ஆகியவற்றின் அருகே இருந்த, இஸ்லாமியர்கள் அடங்கிய பெரும் மக்கள் தொகையைக் கொண்ட சேரிகளை அவர் அகற்றினார். இதனால் லட்சக்கணக்கான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டியது சஞ்சய் காந்தி எந்தவிதமான பதவியில் இல்லாமல் இந்த கொடூரங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார் என்பது.

ஆனால் இதனை இந்திராகாந்தியும் வேடிக்கை மட்டுமே பார்த்து தனது குரூர முகத்தை நாட்டு மக்களுக்கு வெளிக்காட்டினார். அதுசரி அப்போது சர்வாதிகார மனப்பான்மையில் செயல்பட்டுக்கொண்டிருந்த அவரிடம் அடிப்படை நியாயத்தை எதிர்பார்ப்பது தவறுதான். ஆனால், ஒரு கேள்வி எழுவதை மட்டும் தடுக்க முடியவில்லை. எமர்ஜென்சிக்கும், பலருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இதுதானே சர்வாதிகாரத்தின் உச்சம்.

சஞ்சய் காந்தி, இந்திரா காந்தி
சஞ்சய் காந்தி, இந்திரா காந்தி

ஹிட்லர், முசோலினி போன்றோரின் மிச்சம்தான் இந்திரா காந்தியா அவரது குடும்பமா என்ற சந்தேகம் அப்போது அனைவரிடத்திலும் எழுந்தது. ஏனெனில், தாயும், மகனும் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு செயல்பட்ட விதம் அப்படி.

இந்த நாடு சுதந்திரம் பெற எந்த கட்சி தொடர்ந்து போராடியதோ, இந்த சுதந்திர நாட்டின் முதல் பிரதமர் யாரோ அந்த கட்சியிலிருந்து வந்து, சிறந்த ஜனநாயகவாதி என புகழப்படும் நேருவின் மகளாக இருந்துகொண்டு இந்திரா காந்தியிடமிருந்து இப்படி ஒரு நடவடிக்கையை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. 1975 ஜூன் 25ஆம் தேதியிலிருந்து 1977ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதிவரை என மொத்தம் 21 மாதங்கள் தனது பாசிச நடைமுறையால் இந்தியாவை சிறைப்படுத்தி வைத்திருந்தார் இந்திரா.

ஒருவழியாக ஜனநாயக பாதைக்கு திரும்பலாம் என்று முடிவெடுத்து இந்தியாவை விடுதலை செய்து பொதுத்தேர்தலை அறிவித்தார் இந்திரா காந்தி. மக்களுக்கு அந்த வடு ஆறவா செய்திருக்கும். ஆறக்கூடிய வடுவா அது. தங்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதத்தை கையில் எடுத்தார்கள். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 153 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் 92 இடங்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தென் மாநிலங்கள் கொடுத்தது. எந்த தொகுதியில் வென்றது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டதால் எமர்ஜென்சியை கொண்டு வந்தாரோ அதே ரேபரேலி தொகுதியில் மீண்டும் களமிறங்கினார் இந்திரா காந்தி. ஆனால் இந்த முறை அவருக்கு மக்கள் கொடுத்தது தோல்வி.

இந்திரா
இந்திரா

ஆங்கிலேயர்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொடுத்து சென்ற சுதந்திரத்தை தனக்கு மட்டும்தான் கொடுத்திருக்கிறார்கள் என்ற நினைப்பில் அவர் ஆடிய ஆட்டம் இந்நாட்டின் பக்கங்களில் என்றும் மறையாத யாராலும் அழிக்க முடியாத கறுப்பு மை.

காங்கிரஸ் எப்போதும் மிதவாதத்தை போதிக்கும் என அனைவரும் கூறினாலும், இந்திரா இந்த நாட்டுக்கு ஒன்றை சொல்லி சென்றிருக்கிறார். காங்கிரஸிலிருந்து வருபவர் சர்வாதிகாரியாகவும் இருக்கலாம் என்பதுதான் அது. இந்தியாவின் முதல் பெண் பிரதமர், முதல் பெண் நிதியமைச்சர், இரும்புப் பெண்மணி என்று பெயரெடுத்திருக்கும் அதே இந்திரா காந்திதான் இந்தியாவின் முதல் சர்வாதிகாரியும்கூட.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.