இந்திய நிறுவனங்களிடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, அடுத்த ஆண்டு 87 விழுக்காடு நிறுவனங்கள் தங்களுடைய திறமையான ஊழியர்களுக்கு ஊதிய வழங்க முடிவு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த விழுக்காடு கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாகும்.
ஏஓஎன் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி, 87 விழுக்காடு இந்திய நிறுவனங்கள் அடுத்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவதாகத் தெரிவித்துள்ளன. அதில் 61 விழுக்காடு நிறுவனங்கள் 5-10 விழுக்காடு வரை ஊதியத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன.
நடப்பு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவதாக, தெரிவித்த 71 விழுக்காடு இந்திய நிறுவனங்களில், 45 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே தாங்கள் கூறியபடி ஊதிய உயர்வை வழங்கின.
இது குறித்து ஏஓஎன் நிறுவனத்தின் செயல்திறன் தலைமைச் செயல் அலுவலர் நிதின் சேத்தன் கூறுகையில், "கரோனா பரவல் எதிரொலியாக, நாட்டின் பொருளாதாரம், தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதித்துள்ள போதிலும், தங்களின் திறன்மிக்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி, நெருக்கடியில் சிக்கியுள்ள தொழில் துறையை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்திய நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
குறிப்பாக, ஹை டெக், ஐடி, இ-காமர்ஸ், வேதிப்பெருள் , ஐடிஇஎஸ், லைஃப் சயின்ஸ் ஆகிய தொழில் நிறுவனங்கள்தான் பெருமளவில் ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக தெரிவித்திருக்கின்றன" என்றார்.
இதையும் படிங்க: இரண்டாவது காலாண்டு; எஸ்பிஐ லாபம் 55 சதவீதம் உயர்வு!