ETV Bharat / bharat

காஷ்மீர் டைம்ஸ் அலுவலகத்திற்கு சீல் வைத்த அரசுக்கு இஜிஐ கடும் கண்டனம்! - யூனியன் பிரதேச அரசு

ஸ்ரீநகர் : காஷ்மீர் டைம்ஸ் செய்தித்தாள் நிறுவனத்தின் ஸ்ரீநகர் அலுவலகத்தை மூடி சீல் வைத்த யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (இஜிஐ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் டைம்ஸ் அலுவலகத்திற்கு சீல் வைத்த அரசுக்கு இஜிஐ கடும் கண்டனம்!

author img

By

Published : Oct 23, 2020, 3:11 PM IST

ஜம்மு - காஷ்மீரிலிருந்து வெளியாகும் புகழ்பெற்ற ஆங்கில நாளேடான காஷ்மீர் டைம்ஸ் செய்தி நிறுவனத்தின் ஸ்ரீநகர் அலுவலகத்தை கடந்த 19ஆம் தேதியன்று யூனியன் அரசின் நிர்வாகம் சீல் வைத்து மூடியது. இதற்கு நாடு முழுவதுமுள்ள ஊடகவியலாளர் சங்கங்கள், பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இ.ஜி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊடகத் துறையில் 55 ஆண்டுகால பயணத்தைக் கடந்த ஜம்மு-காஷ்மீரின் புகழ்பெற்ற அடையாளங்களுள் ஒன்ற காஷ்மீர் டைம்ஸ் செய்தி நிறுவனத்தின் ஸ்ரீநகர் அலுவலகத்தை யூனியன் அரசின் நிர்வாகம் சீல் வைத்து பூட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

காஷ்மீர் டைம்ஸின் ஸ்ரீநகர் அலுவலகங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் திடீரென சீல் வைத்திருப்பது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் இயங்கிவரும் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயலாகவே கருத முடியும். பிராந்தியத்தில் தொடர்ச்சியான தகவல்தொடர்பு பணிநிறுத்தங்களால் ஊடக வெளியீடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பத்திரிகை வெளியீடுகள் விளம்பர வருவாயை படிப்படியாக இழந்துள்ளன. குறிப்பாக, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு பணிநிறுத்தங்கள், அதைத் தொடர்ந்து தொற்றுநோய் தடுப்பு ஊரடங்கு ஆகியவை வருவாயை முற்றிலுமாக நிறுத்திவிட்டன. ஆன்லைன் பதிப்புகளும் அரசின் இணைய சேவை வேகத் தடையால் முடங்கிக் கிடக்கின்றன.

இது போன்ற காரணங்களால் ஸ்ரீநகர் பதிப்பை மார்ச் மாதத்தில் மூட வேண்டிய கட்டாயம் பல பத்திரிகைகளுக்கு ஏற்பட்டது. இத்தகைய இருண்ட காலங்களில் மிகவும் தேவைப்படும் ஊடகங்களுக்கு உதவுவதற்கு பதிலாக, எந்த அறிவிப்பும் இன்றி காஷ்மீர் டைம்ஸ் நிர்வாக அலுவலகத்தை அரசு சீல் வைத்து மூடியிருக்கிறது.

செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் அனுராதா பாசின் மற்றும் ஊழியர்களின் அலுவல் பதிவுகள், கணினிகள், தளபாடங்கள் உள்ளிட்ட உடைமைகளை தர மறுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை காஷ்மீர் டைம்ஸுக்கு மட்டுமல்ல, யூனியன் பிரதேசத்தில் உள்ள சுதந்திரமாக இயங்க விரும்பும் அனைத்து ஊடகங்களுக்கும் விடுத்துள்ள எச்சரிக்கையாகவே காண்கிறோம்.

யூனியன் பிரதேச நிர்வாகத்தின் நடவடிக்கை பழிவாங்கும் படலத்தின் தொடர்ச்சியாகவே எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கருதுகிறது. ஊடகங்கள் தடையின்றி செயல்படக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.